/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
/
அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 27, 2024 01:01 AM
அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி, நவ. 27-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75 வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசமைப்பு முகவுரையை மாவட்ட கலெக்டர் சரயு வாசிக்க, அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிர்வாக அலுவலர் சரவணன் உறுதிமொழியை வாசிக்க, மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி
ஏற்றனர்.
உயிர் வேதியியல் துறை பேராசிரியர் உமா மகேஸ்வரி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் ராஜா, தினேஷ், செவிலியர் கண்காணிப்பாளர்கள் மகாலட்சுமி, புஷ்பா, ஆரோக்கியமேரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

