ADDED : மே 11, 2026 03:29 AM
ஓசூர்: ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையோரம், 50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. 80 சதவீதத்திற்கும் மேலான பணிகள் முடிந்து விட்டன.
பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு பயன்-பாட்டிற்கு வந்தால், பஸ்கள் வந்து செல்லும்போது, ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதை கருத்தில் கொண்டு, உயர்மட்ட மேம்பாலம் கட்ட, 37.90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்., மாதமே டெண்டர் அறிவிக்கப்பட்டு, பாலம் கட்டும் பணி தனியார் நிறு-வனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஓராண்டாக பணி துவங்கப்படாமல் இருந்தது. இது குறித்து, கடந்த, ௭ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பத்தலப்பள்ளி பகுதியில், கடந்த, ௮ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர்-மட்ட மேம்பாலம் கட்டும் பணியை துவங்கியது. அதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பாலம் பணி நடக்கும், ஒரு கி.மீ., துாரத்திற்கு, சர்வீஸ் சாலையில் வாக-னங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அதனால், சாலையின் இருபு-றமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்தன. பாலம் பணிகள் முடிய ஒன்-றரை ஆண்டுகள் ஆகலாம். அதுவரை, இந்த குறிப்பிட்ட பகு-தியில், சர்வீஸ் சாலையில் தான் வாகனங்கள் செல்லும்.
இந்த, ஒரு கி.மீ., துாரத்தை கடக்க அதிகபட்சம், 15 நிமிடங்க-ளுக்கு மேலாகும். எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலி-ருந்து, ஓசூர் வழியாக பெங்களூரு செல்வோர் மற்றும் அங்கிருந்து தமிழகத்திற்கு வருவோர், தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாது.
பேரண்டப்பள்ளியில் திருப்பி விடலாம்
கிருஷ்ணகிரியிலிருந்து, ஓசூர், பெங்களூரு செல்லும் வாகனங்-களை, பேரண்டப்பள்ளியிலிருந்து தொரப்பள்ளி வழியாக, ராயக்-கோட்டை சாலைக்கு செல்ல வைத்து, அங்கிருந்து ஓசூர் வந்து, ரிங்ரோடு அசோக் பில்லரில் திரும்பி, சீத்தாராமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை அடையும் வகையில் திருப்பி விடலாம். அதனால், பாலம் அமைக்கும் இடத்தில்
போக்குவரத்து நெரிசல் குறையும்.
