ADDED : ஏப் 24, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், வட்டார அளவிலான நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., முருகன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., செந்தில் (கிராம பஞ்சாயத்து) முன்னிலை வகித்தார். துணை பி.டி.ஓ., சதீஷ்பாபு வரவேற்றார்.
இதில், சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் பேசுகையில், ''மாவட்டத்தில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
கொண்டப்பநாயனப்பள்ளி பஞ்.,ல், ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பர்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அனைத்து கட்சிகளின் கொடிகம்பங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.பர்கூர் துணை பி.டி.ஓ., அல்லாபகஸ், நுகர்வோர் சங்க துணைத் தலைவர் பிரகாஷ், பர்கூர் வட்டார தலைவர் கோகுல்ராஜ், மற்றும் துறை சார்ந்த
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

