/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் 2 நாட்களாக தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 03, 2024 01:16 AM
கிருஷ்ணகிரி, டிச. 2-
'பெஞ்சல்' புயலால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பகல், 12:00 மணிக்கு மேல் சாலையில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. மழையால் பல கடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பாறு அணை பகுதியில், 95 மி.மீ., மழை பதிவாகியது. அதேபோல், ஊத்தங்கரை, 71, பெனுகொண்டாபுரம், 46.40, பாரூர், 37.20, போச்சம்பள்ளி, 36, நெடுங்கல், 28.40, கே.ஆர்.பி., அணை, 21.60, கிருஷ்ணகிரி, 12.20, தேன்கனிக்கோட்டை, 5, ஓசூர், 4.10, கெலவரப்பபள்ளி, 4, ராயக்கோட்டை, 3, சூளகிரி மற்றும் சின்னாறு அணை தலா, 2 என மொத்தம், 376.90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
* ஊத்தங்கரையை அடுத்த, மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் பழனி, 40. இவரது மனைவி மைதிலி, 35. இவர்களுக்கு, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையில், அவர்களின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. இதில், மைதிலியின் 7 வயது மகனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதேபோல் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் புளியமரம் சாய்ந்து, சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
* ஓசூரை பொருத்தவரை நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மேல் மழை பெய்ய துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓசூர் பகுதியில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை காய்ச்சல், தலைவலி, இருமல், சளி தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு படையெடுத்தனர்.