தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்தை அரசு கைவிட வேண்டும்


ADDED : செப் 25, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்-துவமனை முன், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்-பாட்டு சங்க, மாவட்ட செயலாளர் பிரபு நிருபர்க-ளிடம் கூறியதாவது:

தமிழக அரசு, 11 மாத ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் செவிலியர்-களை தேர்ந்தெடுக்க முனைந்துள்ளது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அரசின் இந்த நடைமுறையால், அரசு வேலை கனவில் உள்ள செவிலியர்கள், செவிலிய மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஒப்பந்த முறையை அரசு கைவிட்டு, எம்.ஆர்.பி., தேர்வா-ணையம் மூலம் தேர்வு நடத்தி, நிரந்தர செவிலி-யர்களை பணியமர்த்த வேண்டும். அரசு புதிதாக தொடங்க உள்ள, 6 செவிலியர் கல்லுாரிகளில், ஒப்பந்த முறையில் ஆசிரியர்களையும், ஊழியர்-களையும் நியமிக்கும் முறையை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதியில் இந்த அரசு கூறியது போல், 5 ஆண்டுக்கு மேல் அரசு மருத்துவமனை-களில் பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மேம்-பாட்டு சங்க, மாநில செயற்குழு முடிவின் படி, வரும், 28 மற்றும், 29ம் தேதிகளில், செவிலியர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள், செவிலியர் கல்-லுாரிகளில் பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கருப்பு பட்டை அணிந்து, பணிபுரிவது என்றும், தமிழக முதல்வருக்கு எங்களின் கோரிக்கைகளை அனைத்து செவிலியர்களும் மின் அஞ்சல் செய்-வது என்றும், அதே நாளில் சென்னையில் செவி-லியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us