/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவக்கம்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 05, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, ஆபர்கூரிலுள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025 - 2026ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் (டிப்ளமோ இன் கோஆப்ரேட்டிவ் மேனேஜ்மெண்ட்), 52 மாணவர்களும், 115 மாணவியரும் என மொத்தம், 167 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, இரண்டு பருவ முறையில், ஓராண்டு பட்டயப்பயிற்சி தமிழில் நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கான ஓராண்டு பயிற்சியின் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில், தொழிற்பயிற்சி நிலைய உதவி இயக்குனர் மற்றும் முதல்வர் சுப்ரமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் குத்துவிளக்கேற்றி இப்பயிற்சியை துவக்கி வைத்தார். சரக துணைப்பதிவாளர் பாலமுருகன் பேசினார். கவுரவ விரிவுரையாளர்கள் கருணாகரன், இளங்கோ ஆகியோர் பயிற்சியை பற்றி விளக்கவுரை ஆற்றினர். கவுரவ விரிவுரையாளர் ஆசைதம்பி நன்றி கூறினார்.