/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரவில் ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்
/
இரவில் ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்
ADDED : அக் 29, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில் தினமும், 120 டன் குப்பை சேகரமாகிறது. பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்க, மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், இரவு நேரங்களில் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
தள்ளுவண்டி கடைக்காரர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களிடம் சென்று, மக்கும், மக்காத குப்பையை பிரித்து வழங்க வேண்டும். குப்பையை சாலைகளில் போடக்கூடாது. துாய்மை பணியாளர்கள் எடுத்து செல்ல வசதியாக, குப்பையை வைக்க வேண்டும் என, இரவு நேர ஆய்வில் அறிவுறுத்தி வருகிறார்.

