/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு மாநகராட்சி 'சீல்'
/
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு மாநகராட்சி 'சீல்'
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு மாநகராட்சி 'சீல்'
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு மாநகராட்சி 'சீல்'
ADDED : பிப் 01, 2024 10:56 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், ஜூஜூவாடி காந்தி சாலையில் இயங்கி வரும் கடையில், நேற்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான டீ கப் உள்ளிட்டவை, 10 கிலோ அளவில் வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனால், அக்கடை உரிமையாளருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடை உரிமையாளர் தொழில் உரிமம் ஏதும் பெறவில்லை என்பதால், மாநகராட்சி ஊழியர்கள் கடையை பூட்டி, 'சீல்' வைத்தனர். அதேபோல், மூக்கண்டப்பள்ளியில், தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய, ஒரு துணிக்கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.