ADDED : நவ 27, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் டவுன் பஞ்.,ல், மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக கிருஷ்ணன், நாகரசம்பட்டி டவுன் பஞ்.ல், மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பச்சியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
அதேபோல, கிருஷ்ணகிரி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக, நிவேதா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, நகராட்சி துணை தலைவர் சாவித்தரி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

