/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு
/
அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : மே 29, 2024 07:42 AM
கிருஷ்ணகிரி: அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், சிறப்பு ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டில் பட்டப்படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீராங்கனைகள், தேசிய மாணவர் படை, ஆதரவற்ற மாணவியருக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று நடந்தது.
இதில், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், நிறும செயலாண்மை, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். கலந்தாய்வில், மாணவியர் சேர்க்கைக்கான ஆணையை, கல்லுாரி முதல்வர் கீதா, சேர்க்கை குழு உறுப்பினர்களான ஆங்கில பேராசிரியர் சாந்தி, கணிதத்துறை தலைவர் உமா மற்றும் துறைத்தலைவர்கள் கணினி அறிவியல் துறை லாவண்யா, தமிழ்த்துறை கல்பனா, வேதியியல் துறை வள்ளிசித்ரா, புள்ளியியல் துறை பரமகுரு, வரலாற்றுத்துறை கனகலட்சுமி, உயிர் வேதியியல் துறை சீனிவாசன், நிறும செயலாண்மை துறை முரளி உள்பட பலர் உடனிருந்தனர்.