/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயம்
/
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயம்
ADDED : ஜன 27, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியூர்: ஏரியூர் அடுத்த மஞ்சாரஅள்ளி பஞ்., கவுண்டனுாரை சேர்ந்த-வர்கள் கோவிந்தராஜ் - வளர்மதி தம்பதி. இவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் விவசாயம் செய்தும், 10 பால் மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்தும் வருகின்றனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்பகுதியில் சமூக விரோ-திகள் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். இதைய-றியாமல், அப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற மாடு, நாட்டு வெடிகுண்டை கடித்ததால், வாய் முகம் சிதறி காயமடைந்தது. ஏரியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

