ADDED : மே 27, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, மலையாண்டஹள்ளியை சேர்ந்தவர் அம்பிகா, 42. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கறவை மாடுகளை ஓட்டி வந்தார்.
அப்போது இடி, மின்னலுடன் பெய்த மழையில் மின்னல் தாக்கியதில், 50,000 ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மின்னல் தாக்கியதில் அம்பிகா லேசான காயமடைந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.