ADDED : நவ 24, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2,529 மனுக்களை வழங்கினர். தகுதியான மனுக்கள் மீது, துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதில், தமிழக அரசின் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்தில், இலவச ஆடுகள் கேட்டு, 700க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
டி.ஆர்.ஓ., மஞ்சுளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
