ADDED : பிப் 17, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டையில் இருந்து, திருப்-பத்துார் செல்லும் சாலையில், குருகப்பட்டி சாலையோரம் இருந்த, 100 ஆண்டு பழமையான புளியமரம் இருந்தது,
இதன் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்-சிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், போலீஸ் கோட்ரஸை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., பெருமாள், 53, மற்றும் அவரது உறவி-னர்கள் நேற்று காலை காரில் வந்தனர். அவர்கள் வந்த காரை புளி-யமரத்தின் அருகே நிறுத்தி விட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். அப்-போது புளியமரம் சாய்ந்ததில், பெருமாளின் கார் உட்பட, 2 கார்கள் சேதமானது. சிங்காரப்பேட்டை போலீசார், மரத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்து விசாரித்து வருகின்றனர்

