எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டி.சி., வழங்கல்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டி.சி., வழங்கல்
ADDED : மே 30, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்திற்-குட்பட்ட பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 850 க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் படித்து வருகின்றனர். இதில், 128 மாணவ, மாணவியர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்-பதாம் வகுப்பிற்கு செல்ல உள்ளனர்.
ஜூன், 4ல், கோடை விடுமுறைக்கு பின் பள்-ளிகள் திறக்க உள்ள நிலையில், உயர் வகுப்பு-களில் சேர உள்ள மாணவ, மாணவியருக்கு முன்-கூட்டியே மாற்று சான்றிதழ் வழங்க முடிவு செய்து நேற்று மாணவர்களையும், பெற்றோ-ரையும் பள்ளிக்கு அழைத்து மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பொன் நாகேஷ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். இப்பள்ளியில் படித்த எட்டு பேர் தேசிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றி-ருப்பது குறிப்பிடத்தக்கது.
