/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போலீசாருக்கு உதவிய தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
/
போலீசாருக்கு உதவிய தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
ADDED : ஏப் 28, 2025 07:48 AM
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 34. கூலித்தொழிலாளி. கடந்த மாதம், 30ம் தேதி, ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், சக்திவேல் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக சின்னகுத்தி கிராமத்திற்கு சென்று, ராஜேந்திரன் என்பவரது வீடு எங்கு உள்ளது என, சுப்பிரமணியிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர், ராஜேந்திரன் வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். கொலை வழக்கு தொடர்பாக ராஜேந்திரனை, போலீசாார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில், ராஜேந்திரனின் தம்பி நாகராஜ், 35, தன் வீட்டை போலீசாருக்கு எப்படி காட்டி கொடுக்கலாம் என கூறி, சுப்பிரமணியிடம் கடந்த, 23ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி அருகே வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுப்பிரமணியை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான புகார் படி, நாகராஜை நேற்று முன்தினம் பேரிகை போலீசார் கைது செய்தனர்.

