தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடியவர் கைது

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடியவர் கைது

ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடியவர் கைது


ADDED : பிப் 28, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை;ஊத்தங்கரை அருகே, மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை இளவம்பாடி வன எல்-லையை ஒட்டியுள்ளது பள்ளத்துார். இந்த கிரா-மத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் பெருமாள், 43, வனப்பகுதிக்குள் சென்று, தொடர்ந்து வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினரின் ரகசிய நுண்ண-றிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.ஓசூர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) ராஜாங்கம் உத்தரவின்படி, வனச்சரக அலுவலர் முனியப்பன் வழிகாட்டுதலில், ஊத்தங்கரை வனவர் சுபாஷ் தலைமையில், கல்லாவி வனவர் நாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் பெருமாள் வீட்டை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பெருமாள் வீட்டில் நடத்திய சோத-னையில், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்-கப்பட்டிருந்த மான் இறைச்சி, இரண்டு மான் தலைகள் சிக்கின. கையும் களவுமாக பிடிபட்ட பெருமாளை, உடனடியாக கைது செய்த வனத்து-றையினர், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவல-கத்தில் விசாரணை மேற்கொண்டு, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.

காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, இறைச்சியை விற்பது அல்லது வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை பாயும் என, வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்-பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us