ADDED : டிச 20, 2025 07:08 AM
உத்தனப்பள்ளி: கூட்டுறவு வங்கி துறை, பஞ்., செயலர் பணி நியமனங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்-களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், உத்தனப்பள்ளியில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் மிதுன் தலைமை வகித்தார். தலைவர் சந்திர-சேகர் முன்னிலை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், தலைவர் நஞ்சாரெட்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் உட்பட பலர் பேசினர். உத்தனப்-பள்ளி பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும். லாலிக்கல் கொத்துாரில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும். உத்தனப்பள்ளி பஸ் ஸ்டாப் ஆக்கிர-மிப்பை அகற்ற வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தினர்.
சூளகிரி தாசில்தார் ரமேஷ்பாபு பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் போராட்டம்
முடிவுக்கு வந்தது.
