/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2024 07:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று மதியம் உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில், தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சில அலுவலர்கள் மிகவும் தொய்வாக பணியாற்றுவதாக கூறி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் பி.டி.ஓ., மற்றும் பொறியாளர்
ஒருவரை, கலெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்தார். இதை கண்டித்தும், இவர்களின் பணிநீக்கத்தை ரத்து செய்து, உடனே பணி வழங்கக்
கோரியும், கண்டன கோஷங்கள் எழுப்பினர்.