ADDED : செப் 10, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்-தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்-லம்பள்ளி வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
வட்ட செயலாளர் சிவசுப்ரமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் முனுசாமி, வட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் ஆர்ப்பாட்-டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கை குறித்து விளக்கினர்.இதில், மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை, வி.ஏ.ஓ.,க்கள் மீது, அரசு சுமத்துவதை தவிர்த்து, வேளாண் துறையினரிடம் ஒப்-படைக்க வேண்டும். இப்பணியை வருவாய்த்துறையினர் மேற்-கொள்ள வேண்டும் என்றால், கூடுதல்
பணியாளர்களை அரசு நிய-மிக்க நடவடிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பிரசார செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.