தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளியில் டெங்கு, திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

பள்ளியில் டெங்கு, திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

பள்ளியில் டெங்கு, திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு


UPDATED : நவ 15, 2026 02:57 AM

ADDED : நவ 15, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 02:57 AM ADDED : நவ 15, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி சார்பில், காமராஜ் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்களின் வாழ்க்கை சுழற்சி குறித்து, மாணவ, மாணவியருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.'ஏடிஸ்' கொசுக்கள் பெரும்பாலும், தேங்கியுள்ள சுத்தமான நன்னீரில் இனப்பெருக்கம் செய்வதால், அவை உற்பத்தியாவதை தடுக்க, வீடுகள் மற்றும் பள்ளி வளாகங்களில், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள் போன்றவற்றை அகற்ற

வலியுறுத்தப்பட்டது.

காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகி, உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று கொள்ள, மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்

பட்டது.

அதேபோல், ஓசூர்

ராமநாயக்கன் ஏரியில், திடக்கழிவு மேலாண்மை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மக்கும், மக்காத குப்பை, சுகாதார குப்பை, சிறப்பு கழிவுகள் என, 4 வகை குப்பையை தரம் பிரித்து வழங்க, பொதுமக்களை மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us