/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
/
ரூ.36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
ரூ.36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
ரூ.36 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2025 12:58 AM
பர்கூர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், ஒப்பதவாடி பஞ்., கணமூர் கிராமத்தில், ராஜ்யசபா, அ.தி.மு.க.,- எம்.பி., தம்பிதுரை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பல்நோக்கு கட்டடம், பாரத கோவில் கிராமத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நாடக மேடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் அங்கிநாயனப்பள்ளி மற்றும் அச்சமங்கலம் கிராமங்களில் தலா, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். பர்கூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஜெயபாலன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரவிச்சந்திரன், ஜெ., பேரவை மாவட்ட தலைவர் தங்கமுத்து, இணை செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர்.
தம்பிதுரை எம்.பி., புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து பேசும் போது, வரும், 2026 சட்டசபை தேர்தலில், பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வை தோற்கடித்து, அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்து, இ.பி.எஸ்., மீண்டும் முதல்வராக இரட்டை இலை சின்னத்தில் மக்கள் ஒட்டளிக்க, கேட்டுக் கொண்டார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் துாயமணி, இலக்கிய அணி செயலாளர் கார்த்திகேயன்
உட்பட பலர் பங்கேற்றனர்.

