/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.86 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
/
ரூ.86 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
ADDED : மே 16, 2025 01:19 AM
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, உனிசேநத்தம் பஞ்., தேவரபெட்டா கிராமத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பகுதி நேர ரேஷன் கடை கட்டும் பணி, கும்மாள அக்ரஹாரம் கிராமத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை பணி துவக்கப்பட்டது.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, கோட்டமடுகு பஞ்., ஒட்டர்பாளையம் கிராமத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, கோபச்சந்திரம் கிராமத்தில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டட பணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டத்தில், கும்மாளம் முதல் கங்கனஹள்ளி வரை, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூஜை செய்து துவக்கி வைத்தார். இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா உட்பட பலர் பங்கேற்றனர்.