தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.1.21 கோடியில் வளர்ச்சி பணி

ரூ.1.21 கோடியில் வளர்ச்சி பணி

ரூ.1.21 கோடியில் வளர்ச்சி பணி


ADDED : டிச 23, 2024 09:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியம், அனுமந்தபுரம் மற்றும் ரத்தினகிரி பஞ்., உட்பட்ட உனிசெட்டி, அய்யூர், திம்மனுார், கோவகுட்டை, கூச்சுவாடி, நெமிலேரி, திப்பனுார், ஒசஹள்ளி, அனுமந்தபுரம், குடியூர், கோவிந்தப்பள்ளி, தட்டசந்திரம், சாத்தனக்கல் ஆகிய கிராமங்களில், தளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, கெலமங்கலம் ஒன்றிய பொது நிதி மற்றும் முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை சார்பில், 1.21 கோடி ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய், சிமென்ட் சாலை, தார்ச்சாலை ஆகியவை அமைக்கும் பணிகளை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

கெலமங்கலம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, இ.கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமையா, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us