தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : ஏப் 27, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் அருகே கெலவரப்பள்ளி கிராமத்தில், மிகவும் பழமையான சித்தேஸ்வர சுவாமி, கெம்பம்மா தேவி, கட்டத பீரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்து இருந்ததால், பழைய கோவிலை இடித்து விட்டு, புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

விழாவையொட்டி விரதம் இருந்த, 500க்கும் மேற்பட்ட குரும்பர் இன மக்கள், பாரம்பரிய வழிபாடான தலைமேல் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, மேளதா-ளங்கள் முழங்க, தொட்டம்மா, சிக்கம்மா, சித்தலிங்கேஸ்வரா, உஜ்ஜிலிலிங்கேஸ்வரா, கூலிசந்திரசாமி மற்றும் கரியால லிங்-கேஸ்வரா உள்ளிட்ட பல்வேறு உற்சவ மூர்த்திகளை ஊர்வல-மாக கொண்டு வந்து, சிறப்பு பூஜை செய்தனர். திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்-டியினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us