/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : அக் 04, 2025 12:50 AM
தேன்கனிக்கோட்டை,கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மணியம்பாடி, மேலுார், ஒட்டர்பாளையம் ஆகிய, மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள், ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையை முன்னிட்டு, கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி, கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு, வெங்கடாசலபதி, திம்மராயப்பா, சிக்கம்மா, தொட்டம்மா, பசவேஸ்வரா, வீரபத்திரன், கலுவே மல்லேஸ்வரா, பட்டாளம்மா, கரகமாரியம்மா, எல்லம்மா கிராம தேவதைகளின் சிலைகளை, மேள, தாளங்கள் முழங்க, நேற்று முன்தினம் பக்தர்கள் ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு சிறப்பு பூஜை செய்து சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.