தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சிவன் கோவில்களில் தீபமேற்றி கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு

சிவன் கோவில்களில் தீபமேற்றி கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு

சிவன் கோவில்களில் தீபமேற்றி கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு


ADDED : நவ 25, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று மாலை, அனைத்து சிவன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல், பழையபேட்டை பிரசன்ன பார்வதி சமேத சோமேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதி பிரசன்ன பார்வதி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில், காவேரிப்பட்டணம் தமட்டகுட்டை நந்தீஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோவில், பெரிய ஏரிக்கரைடிய ஒட்டிய காலபைரவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் நேற்று மாலை, பரணி தீபம் ஏற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மலையில் மஹா தீபமேற்றி, வாணவேடிக்கை நடத்தப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.* காவேரிப்பட்டணம் தமட்டகுட்டையில் உள்ள நந்தீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை, 6:00 மணியளவில் பரணி தீபம் தொடர்ந்து கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.

* ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், கோவிலில் இருந்து விளக்கை ஊர்வலமாக எடுத்து சென்ற ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் பக்தர்கள் இணைந்து, மஹா தீபத்தை ஏற்றினர். தொடர்ந்து, வாண

வேடிக்கை நடந்தது.

கெலமங்கலத்தில் உள்ள பழமையான கவுரி சித்தலிங்கேஸ்வரர் சுவாமி கோவில், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஓம்சக்தி அம்மன் கோவில் மற்றும் தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூன துர்க்கம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us