/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
ADDED : மே 27, 2024 05:51 AM
ஓசூர் : ஓசூர், சின்னஎலசகிரி காமராஜ் நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மாவிளக்கு திருவிழா கடந்த, 14ல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மேலும், அம்மனை ஊர் எல்லைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, கிடா வெட்டி படையலிட்டு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியுடன், பல்லக்கு உற்சவம் நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பூ கரகம், அக்னி கரகம் சுமந்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பலர், அம்மன் வேடமணிந்து அருள் வந்து ஆடி வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.