வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 16, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:ஓசூர்,
கிருஷ்ணா நகரிலுள்ள வரசித்தி விநாயகர் மற்றும் துர்க்கையம்மன்
கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு
சிறப்பு பூஜை நடந்தன.
முன்னதாக, கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி
ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா விஷ்ணு ஹோமம் போன்றவை நடந்தன.
பக்தர்கள் கலசங்களை சுமந்தவாறு, கோவிலை மூன்று முறை சுற்றி வலம்
வந்தனர்.
தொடர்ந்து, வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக,
அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை,
கோவில் கமிட்டி தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர்
முருகன், இணை செயலாளர் பிரபு மற்றும் அர்ச்சகர்கள் சுதர்சனன், கணேஷ்,
முரளி ஆகியோர் செய்திருந்தனர்.
