/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஆக 06, 2025 01:12 AM
ராயக்கோட்டை, ராயக்கோட்டை அருகே தோட்டம் பகுதியிலுள்ள சாதேவனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரம் நடந்தன. விழாவில் நேற்று காலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, ராயக்கோட்டை சோமநாதேஸ்வரர் கோவில் அர்ச்சகர் விவேகானந்தன் தலைமையில், வேதமந்திரங்கள் முழங்க பூஜை நடந்தது.
அதன் பின், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடு, கோழி பலியிட்டு, ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். காவடியாட்டம், கரகாட்டம், கோலாட்டம் நடந்தது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது.