தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முருகன் கோவில்களில் பக்தர்கள் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் பக்தர்கள் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் பக்தர்கள் பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு


ADDED : ஏப் 02, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்-பள்ளி முருகன் கோவிலில், அதிகாலை அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. காவேரிப்பட்டணம் பாலக்கோடு சாலை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிவசுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்து, மயிலாட்டம், ஒயிலாட்-டத்துடன் அலகுகுத்தி சென்றனர். காவேரிப்பட்டணம் பன்னீர்-செல்வம் தெரு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பெண்கள் பால் குடம் எடுத்து வந்தனர்.பர்கூர் ஒன்றியம் அண்ணா நகர் வள்ளி, தெய்வானை சமேத சுப்-பிரமணியசுவாமி கோவில், பர்கூர் சிகரலப்பள்ளி திருச்செங்-குன்றம் கல்யாண முருகன் கோவில், வேப்பனஹள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி காரகுப்பம் பச்சைமலை முருகன் கோவில், பர்கூர் ஜெகதேவி சாலையில் உள்ள பாலமுருகன் கோவில், சந்துார் மாங்கனி முருகன் கோவில், போச்சம்பள்ளி அடுத்த அகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட மாவட்டம் முழு-வதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்-தது.

* கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், பழமையான நடுபழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று, 67வது பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நடு-பழனி ஆண்டவர் நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை முதலே சுற்றுவட்டார பகுதி-களில் உள்ள பக்தர்கள் சுவாமிக்கு மயில் காவடி, புஷ்ப காவடி மற்றும் அலகு குத்தி மேள, தாளங்களுடன் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஒரு சிலர் சேவல், பசு, கன்றுகள் உள்ளிட்டவைகளை கோவில் வளாகத்தில் காணிக்கை-யாக செலுத்தினர். காலை முதல் மாலை வரை 1,000க்கும் மேற்-பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிர்-வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே நீர், மோர், தர்-பூசணி, அன்னதானம் வழங்கப்பட்டது.

* ஊத்தங்கரை செங்குந்தர் தெருவிலுள்ள, வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. காவடி சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர் ஒருவரின் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்து, அந்த மஞ்சள் பக்தர்களுக்கு பிரசா-தமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us