/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஐயப்பன் கோவில் குடமுழுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
ஐயப்பன் கோவில் குடமுழுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ஐயப்பன் கோவில் குடமுழுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ஐயப்பன் கோவில் குடமுழுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : நவ 02, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த ஒட்டப்பட்டியிலுள்ள ஐயப்பன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி, பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் தட்ரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஒட்டப்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவில் குடமுழுக்கு விழா நாளை (3-ம் தேதி) நடக்கிறது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின், 2வது நாளான நேற்று, ஒட்டப்பட்டி கிராமத்தில் இருந்து, 5 கி.மீ., துாரத்திலுள்ள பெண்ணேஸ்வர மடம் தென்பெண்ணை ஆற்றுக்கு சுவாமியை, கிராம மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
ஆற்றில் சுவாமி புனித நீராடி, சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், பெண்கள், கிராம மக்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனிதநீரை, தீர்த்தக்குடத்தில் எடுத்து கொண்டு ஊர்வலமாக ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.