/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவத்தை பக்தர்கள் தரிசனம்
/
ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவத்தை பக்தர்கள் தரிசனம்
ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவத்தை பக்தர்கள் தரிசனம்
ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவத்தை பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூலை 14, 2025 03:43 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரில் உள்ள விஜய விநாயகர் சத்சங்கத்தில், ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்-சவ விழா கடந்த, 11ம் தேதி துவங்கியது.
அன்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணிக்கு, கலா சத்தியநா-ராயணன் குழுவினரின் சம்பூர்ண நாராயணீயம் பாராயணம், மதியம், 2:00 முதல், நாராயணீயம் தொடர்ச்சி, மாலை, 6:00 மணிக்கு, ஜெய் ஸ்ரீகிருஷ்ணா பஜன் மண்டலி சார்பில், ரேணுகா ரமேஷ் குழுவினரின், தோடய மங்களம், குரு கீர்த்தனை அஸ்ட-பதி நடந்தது.நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, ஓசூர் முக்தாபாய் மகிளா பஜன் மண்டலியின், அஷ்டபதி, பஞ்சபதி பஜனை தொடர்ச்சி, மதியம், 3:00 மணிக்கு, அயங்க பஜனை, மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் உள்ளிட்ட பல்-வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவம் மற்றும் ஆஞ்சநேயர் உத்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.