ADDED : மே 18, 2026 02:19 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் அருகே, திருப்புகழ் வழிபாடு நேற்று நடந்தது. இதில் காலை, 8:45 மணிக்கு, மஹா கணபதி பூஜை, வேல் பூஜை மற்றும் கந்தர் அனுபூதி பாராயணம், 10:00 மணிக்கு, மஹா வேல்மாறல் பாராயணம், அறக்கட்டளை தலைவர் விஜயகுமாரின் சொற்பொழிவு, திருப்புகழ் பாராயணம் மற்றும் மஹா புஷ்பாஞ்சலி, வேலுக்கு சிறப்பு பூஜை செய்து வேல்மாறல் திருப்புகழ் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், வேலுக்கு விஸ்வரூப பூஜை நடத்தி, இளநீர், தேன், கரும்புச்சாறு, சந்தனம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபி-ஷேகம் செய்து, தாமரை, ரோஜா, துளசி, அருகம் புல், செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்-டது. முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வேல்மாறல் பாரா-யணம் செய்யப்பட்டது. மன பயம் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்க, இப்பூஜை மேற்கொள்ளப்பட்டது. இதில், முருகன் குதிரை பூட்டிய தேரில் செல்வது போன்ற அமைப்பில், சிறப்பு அலங்-காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் வேல்மாறல் புத்தகங்கள், முருகன் பிரசாதம் வழங்கப்பட்டன.
