ADDED : மே 01, 2026 02:26 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, பா.ஜ., தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்ட, பா.ஜ.,வில், தர்மபுரி நகர தலைவராக சாய் ஆறுமுகம் செயல்பட்டு வந்தார். இவர் கட்சியின் கட்டுபாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்-களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
மேலும், முகநுால் மூலம் கட்சிக்கு எதிராக அவதுாறு பரப்பி வந்தார். இதனால், தமிழக, பா.ஜ., மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படியும், மாவட்ட மையக்குழுவின் முடிவின் படி, தர்மபுரி நகர தலைவர் பொறுப்பில் இருந்து, சாய் ஆறுமுகம், நேற்று முதல் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
