/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு சாலை விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு
/
வெவ்வேறு சாலை விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 13, 2024 03:42 AM
போச்சம்பள்ளி,: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, எதர்லப்பட்டியை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன், 58, இவர் நேற்று முன்தினம், சூப்பர் எக்செல் பைக்கில் மனைவி சரசுவுடன், 55, போச்சம்பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாளேதோட்டம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் டிப்பர் லாரி சரசு மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதேபோல் போச்சம்பள்ளி, குள்ளனுார் பகுதியை சேர்ந்தவர் விஸ்வபாரதி, 22. இவர் தனது பஜாஜ் பைக்கில் போச்சம்பள்ளி நோக்கி தாலுகா அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த பொக்லைன் வாகனத்தின் மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் நேற்று உயிரிழந்தார்.போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.