/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
24 மனை செட்டியார்கள் நல சங்க மஹா சபை கூட்டம்
/
24 மனை செட்டியார்கள் நல சங்க மஹா சபை கூட்டம்
ADDED : ஆக 06, 2011 01:57 AM
ஓசூர்: ஓசூரில் 24 மனை செட்டியாளர்கள் நலச்சங்க மகா சபை கூட்டம் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா 7ம் தேதி நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார்கள் நலச்சங்கம் தலைவர் நாகராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியாளர்கள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு மஹா சபை கூட்டம் மற்றும் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஓசூர் கே.ஏ.பி., திருமண மண்டபத்தில் வரும் 7ம் தேதி நடக்கிறது. சங்க தலைவர் நாகராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பாலகாந்தி, இளைஞர் அணி தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட துணைத்தலைவர் சதாசிவம், குணசேகரன், சென்னையன், மாவட்ட துணைச்செயலாளர் சக்ரபாணி, நாகராஜ், வெங்கடேஷன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சேகர், சீனிவாசன், மஞ்சுநாதன், ஆனந்தன், மணி, முத்துராஜ், மாதையன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாவட்ட மகளிர் அணி தலைவி மமதா வெங்கடாசலம் வரவேற்கிறார். 24 மனை செட்டியாளர் நலச்சங்க அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணா, மகளிர் அணி தலைவி சுலோச்சனா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைக்கின்றனர். விழாவில், 24 மனை செட்டியார் நலச்சங்கத்தினர் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.