/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளூரில் பதிவு செய்ய வசதி
/
இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளூரில் பதிவு செய்ய வசதி
இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளூரில் பதிவு செய்ய வசதி
இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளூரில் பதிவு செய்ய வசதி
ADDED : ஆக 06, 2011 02:00 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரிகள் இனி வரும் காலங்களில் உள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: முது நிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., சி.ஏ., மற்றும் பி.எல்., தொழில் முறை போன்ற படிப்புகளை பதிவு செய்யவும், ஏற்கெனவே செய்து கொண்ட பதிவினை புதுப்பிக்கவும் மேலும் பதிவு விவரங்களை கூடுதலாக பதியவும், மாற்றிடவும் இனி தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் சென்னையில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு செல்ல தேவையில்லை. தற்போது, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு பதிவுதாரர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யும் பதிவுதாரர்களுக்கு உடனடியாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் புதியதாக பதிவு செய்யும் பதிவுதாரர்கள் ப்ரவுசிங் சென்டரில் இருந்தும் வேலை வாய்ப்பக இணையதள முகவரிக்கு பதிவு செய்யலாம். இதற்குபதிவு தாரர்கள் இணையதளத்தில் யூசர் ஐடி யை உருவாக்க வேண்டும். இதன் பின்னர் தொடர்சியாக தங்களது விபரங்களை உள்ளீடு செய்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு பெயரை தேர்வு செய்து பதிவெண்ணுடன் கூடிய அடையாள அட்டையை பெறலாம். அவர்களுக்கென பதிவெண் வழங்கப்படும் வரை அவர்களால் உருவாக்கப்பட்ட யூசர் ஐடியை பயன்படுத்தலாம். பழைய பதிவுதாரர்கள் தங்களது யூசர் ஐடியாக தங்களது வேலை வாய்ப்பு பதிவெண்ணையும், தங்களது பிறந்த தேதியை பாஸ்வேர்டாகவும் உள்ளீடு செய்து புதுப்பித்தல், கூடுதல் புதுப்பித்தல், கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.