பர்கூர் அரசு பாலிடெக்னிக்கில் நேரடி மாணவர் சேர்க்கை
பர்கூர் அரசு பாலிடெக்னிக்கில் நேரடி மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 03, 2026 02:58 AM
கிருஷ்ணகிரி:பர்கூர், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது என, கல்லுாரி முதல்வர் முருகன் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் செட்டிப்பள்ளியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இக்கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிகல் பாடப்பிரிவுகள் உள்ளன.பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் முதலாம் ஆண்டிலும் பிளஸ் - 2 (அனைத்து பிரிவும்) மற்றும் பத்தாம் வகுப்புடன் இரண்டு வருட ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள், இரண்டாம் ஆண்டிலும் நேரடியாக கல்லுாரியில் சேரலாம். இக்கல்லுாரியில் நுாறு சதவிகித வேலைவாய்ப்பு, மாணவ, மாணவியருக்கு, தமிழ்புதல்வன், புதுமைப்பெண் உதவித்தொகை, இலவச பயண அட்டை உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு படித்து, பாலிடெக்னிக்கில் முதலாண்டு சேரும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி, ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. தகுதியான சான்றிதழ்களுடன் மாணவ, மாணவியர் கல்லுாரியில் நேரடியாக வந்து, விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
