ADDED : டிச 04, 2024 01:34 AM
கிருஷ்ணகிரி, டிச. 4-
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் டிச., 3ல், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி புதுாரிலுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்ஜோதி, மாற்றுத்திறன் மாணவர்கான கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், சமுதாயத்தில் சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி ஆய்வாளர் சுதாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஆசிரியர் பயிற்றுனர் தமிழரசு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விழாவில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், நோட்டு, பென்சில், ஸ்கெட்ச், ஸ்கேல் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு, 'ஒற்றுமையை வளர்ப்போம்' என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ஜித்தின், சத்யா ஆகியோர்
செய்திருந்தனர்.