sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

/

மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

மூன்று கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


ADDED : டிச 25, 2024 07:47 AM

Google News

ADDED : டிச 25, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை நாரலப்பள்ளி பஞ்., நலகுண்டலப்பள்ளி அருகே, மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, 3 கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பொதுவாக, பாறை ஓவியங்களை வரைய பயன்படுத்திய வண்ணம் மற்றும் அவை வெளிப்படுத்தும் கருத்தை, 3 காலகட்டங்களாக பிரிக்கலாம். அவை, செஞ்சாந்து புதிய கற்காலத்தையும், வெண்சாந்து பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்று காலம் எனவும் வகைப்படுத்துவர்.

கண்டறியப்பட்ட இந்த பாறை ஓவியங்கள், மூன்று கால கட்டத்திலும் வரையப்பட்டுள்ளன. செங்குத்து பரப்பிலுள்ள, 2 மனித உருவங்களில், ஒன்று செஞ்சாந்திலும், மற்றது வெண்சாந்திலும் இறந்தவரின் நினைவாக வரையப்பட்டுள்ளது. இந்த மரபே பின்னாளில் நடுகல்லானது. கூரை பரப்பில் அலங்கரிக்கப்பட்ட சாய்ந்த பாண்டில் விளக்கு, ஆரத்துடன் கூடிய இரண்டு சக்கரங்கள், 4 இதழ் பூக்கோலம், 2 வரிசைகளில் தலா, 3 'ப' வடிவ குறியீடுகள் வரைந்து, அவற்றை சுற்றி புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, வரலாற்று கால மக்களின் வாழ்வியலை குறிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆய்வில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், நலகுண்டலப்பள்ளி அன்பழகன், பாலாஜி, குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us