/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கல்
ADDED : அக் 26, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமை வகித்தார். மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ. ரமணி, எஸ்.ஐ. கீதா, போலீஸ் சங்கீதா, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடை, பரிசு, இனிப்பு ஆகியவற்றை அரசு ஆண்கள் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஜே.ஆர்.சி., ஆசிரியர் கணேசன் ஆகியோர் வழங்கினர்.