/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று, மஞ்சப்பை வழங்கல்
/
நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று, மஞ்சப்பை வழங்கல்
நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று, மஞ்சப்பை வழங்கல்
நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று, மஞ்சப்பை வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 07:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ஓசூர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் திவ்யா டிரக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பவுல்ராஜ் தலைமை வகித்தார். திவ்யா டிரக் ஹவுஸ் நிறுவனர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த பூமியை பாதுகாக்க சுற்றுச் சூழலை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். துாய்மையான காற்றை பெற அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பேப்பர் மற்றும் மஞ்சப்பைகளை பயன்படுத்த, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள், மற்றும் மஞ்சப்பை வழங்கப்பட்டன. மேலும், பள்ளிக்குள் குறைக்க வேண்டிய பிளாஸ்டிக் பொருட்களின் வகைகளையும், அதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அதற்கு மாற்றாக அட்டைகள், மரபென்சில்கள், ஸ்டீல் அளவுகோல்கள் வழங்கப்பட்டன. முதுகலை உயிரியல் ஆசிரியர் பாலாஜி, கணித ஆசிரியர் வினுதா, ஆய்வக உதவியாளர் சசிகலா உள்பட பலர் பங்கேற்றனர்.

