/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்
ADDED : டிச 12, 2025 05:35 AM
ஓசூர்: ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள, 24 அரசு உயர்-நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், 8,256 பேருக்கு, அப்பாவுபிள்ளை, பொன்னம்மாள் அறக்-கட்டளை சார்பில், 200 ரூபாய் மதிப்புள்ள திருக்-குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் துவக்க விழா ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளியில் நடந்தது. ஓசூர், காங்., - முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் தலைமை வகித்து, மாணவ, மாணவி-யருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கி துவக்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் உட்பட அனை-வருக்கும் திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், துணை மேயர் ஆனந்தய்யா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்-கேற்றனர்.தொடர்ந்து, ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில், 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான இலவச மருத்துவ முகாமை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டு, தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

