மாவட்ட குங்பூ போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட குங்பூ போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : மார் 12, 2024 04:38 AM
ஓசூர்: சூளகிரியிலுள்ள தனியார் மண்டபத்தில், இந்தியன் கிங் சவுலின் குங்பூ ஆல் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான குங்பூ போட்டிகள் நடந்தன.
பேரிகை, சூளகிரி, அத்திமுகம், உத்தனப்பள்ளி, மாதேப்பள்ளி, ஓசூர், அலேசீபம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சூளகிரி இன்ஸ்பெக்டர் தேவி, தமிழ்நாடு குங்பூ அசோசியேசன் தலைவர் சுஜூ சரவணன், தி.மு.க., தெற்கு ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், சமூக சேவகர்கள் சீனிவாசன், நாகராஜ் ஆகியோர், குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சூளகிரி இந்தியன் கிங் சவுலின் குங்பூ ஆல் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி மாஸ்டர் பவித்ராமன் தலைமையில், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
