/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்
/
சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்
ADDED : ஜூலை 26, 2025 12:51 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்ணம் ஒன்றியம் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், சரக அளவிலான கைப்பந்து போட்டியின் துவக்க விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர், போட்டியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் காளியப்பன் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் கனகராஜ், பொருளாளர் ஜோதிமணி, உடற்கல்வி இயக்குனர் மாதேஷ், சரக இணை செயலாளர் ஜலேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, உலக அமைதி, ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாக சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. போட்டியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, தேவிப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர். உதவி தலைமை ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.