தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி


ADDED : நவ 29, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை மற்றும் வானவில் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது.

ஒன்றிய அளவிலான போட்டிகளில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். தனியார் பள்ளி டி.இ.ஓ., கோபாலப்பா போட்டியை துவக்கி வைத்து பேசுகையில்,'' மாணவர்களின் திறமைகளை வளர்க்க அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானவில் மன்றம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பாடுபட்டு வருகிறது. வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். அறிவியல் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளது. அவற்றை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,''

என்றார்.

மாணவ, மாணவியர் தாங்கள் தயாரித்த அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தாசில்தார் ரமேஷ், சான்றிதழ் வழங்கினார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர் லோகநாயகி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) அசோக் உள்பட பலர் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us