தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வட்டார தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்

வட்டார தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்

வட்டார தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 26, 2024 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில், வேளாண் துறையின் அட்மா திட்டம் சார்பில், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, விதை நேர்த்தி செய்வதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் வேளாண் துறை மானிய திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். அத்-துடன், நொச்சி மரக்கன்றுகள் வினியோக திட்டம் பற்றியும், பயிர் காப்பீடு செய்வதின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

வேளாண் அலுவலர் ரேணுகா, விவசாயிகளுக்கு ஜிப்சம், விசைத்-தெளிப்பான் மற்றும் ஜிங்சல்பேட் மானிய விபரங்கள் மற்றும் பயன்கள் பற்றியும் விளக்கினார். அட்மா திட்ட வட்டார தொழில்-நுட்ப

மேலாளர் சுகுணா, அட்மா திட்ட மானிய திட்டங்கள், உள் மாவட்ட பயிற்சி, செயல்விளக்கம் மற்றும் சுற்றுலாவின் பயன்கள் பற்றி கூறினார். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம்

செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us