/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட வாலிபால் போட்டி; ஓசூர் அணி சாம்பியன்
/
மாவட்ட வாலிபால் போட்டி; ஓசூர் அணி சாம்பியன்
ADDED : டிச 09, 2024 07:39 AM
ஓசூர்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், காமராஜ் காலனியிலுள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்தன.
தேன்கனிக்கோட்டை, மத்துார், மாடரஹள்ளி, தளி, ஓசூர், குருபரப்பள்ளி, பேகேப்பள்ளி, மல்லப்பாடி உட்பட மொத்தம், 12 அணிகள் விளையாடின. நேற்று காலை நடந்த இறுதி போட்டியில், ஓசூர் ஈகில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், மத்துார் அணியும் மோதின. அதில், 25 -22, 25 - 22, 25 - 21 என்ற செட் கணக்கில், ஓசூர் அணி வெற்றி பெற்றது. மத்துார் அணி இரண்டாமிடம் பெற்றது. 3வது, 4வது இடத்திற்கு, தளி டிஸ்கவர் கல்லுாரி அணியும், மாடரஹள்ளி அணியும் மோதின. அதில், 25 - 23, 25 - 17, என்ற செட் கணக்கில், மாடரஹள்ளி அணி வெற்றி பெற்று மூன்றாமிடம் பெற்றது.
முதலிடம் பெற்ற ஓசூர் அணிக்கு, 25,000 ரூபாய் மற்றும் பரிசுக்கோப்பை, 2ம் இடம் பெற்ற மத்துார் அணிக்கு, 20,000 ரூபாய், பரிசுக்கோப்பை, 3ம் இடம் பெற்ற மாடரஹள்ளி அணிக்கு, 15,000 ரூபாய் மற்றும் 4ம் இடம் பெற்ற தளி அணிக்கு, 10,000 ரூபாய், பரிசு கோப்பைகள் ஆகியவற்றை, பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகர செயலாளர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் வழங்கினர்.
அதேபோல், சதீஷ், ஜனா, தினேஷ், மணி ஆகியோருக்கு, சிறந்த வீரருக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், தொ.மு.ச., மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் திம்மராஜ், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.