/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொ.மல்லாபுரத்தில் பயன்பாட்டுக்கு வராத பூங்கா
/
பொ.மல்லாபுரத்தில் பயன்பாட்டுக்கு வராத பூங்கா
ADDED : மே 07, 2025 01:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தர்மபுரி மெயின் ரோடு, ஆர்.எம்.ரோடு, வினோபாஜி தெரு, பில்பருத்தி, உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தர்மபுரி மெயின் ரோடு, தனியார் நுாற்பாலை அருகில், 2023 -24 ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தில், 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
பூங்கா அமைக்கும் பணி முடிவடைந்து, திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கு ஒரே பொழுது போக்கு உள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில், ஏணி, ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை, ஓய்வு இருக்கைகள் கழிவறை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.